Home இலங்கை சமூகம் வரலாற்றில் முதல் தடவையாக அமைக்கப்படும் மானிப்பாய் மேற்கு கேளிமூலை வீதி!

வரலாற்றில் முதல் தடவையாக அமைக்கப்படும் மானிப்பாய் மேற்கு கேளிமூலை வீதி!

0

மக்களின் நீண்ட கால கோரிக்கைக்கு அமைவாக அனர்த்தம் காரணமாக அதிகம்
பாதிக்கப்படும் மானிப்பாய் மேற்கு கேளிமூலை முதலாம் ஒழுங்கை முழுமையாக புனரமைப்பு
செய்யப்படவுள்ளது.

பிரதேச சபையின் விசேட வட்டார நிதி மூலம் இவ் வேலைகள் ஒரு மில்லியன்
பெறுமதியில் முன்னெடுக்கப்படவுள்ளது.

புனரமைப்பு

வரலாற்றில் முதல் தடவையாக இவ் வீதி அமைக்கப்படவுள்ளமை தொடர்பில் ஊர் மக்கள்
தமது மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளனர்.

 அதன்படி, இதற்குரிய மூலப்பொருட்கள் தொழில்நுட்ப உத்தியோகத்தர், ஒப்பந்தகாரர்
முன்னிலையில் அண்மையில் அளவீடு செய்யப்பட்டது.

தொடர்ச்சியாக இன்று (12.12.2025) காலை
வட்டார மக்கள் பிரதிநிதி தலைமையில் இடம்பெற்ற வீதி
அமைப்பு பணிகளின் ஆரம்ப நிகழ்வில் சபையின் தவிசாளர் ஜெசீதன், பிரதேச சபை
உறுப்பினர்கள் பிரதேச மக்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version