Home சினிமா அந்த நடிகை கேட்டதில் என்ன தப்பு.. மணிரத்னம் சினிமா துறை பற்றி சொன்ன விஷயம்

அந்த நடிகை கேட்டதில் என்ன தப்பு.. மணிரத்னம் சினிமா துறை பற்றி சொன்ன விஷயம்

0

 இயக்குனர் மணிரத்னம் தற்போது இயக்கி இருக்கும் தக் லைப் படம் நாளை ரிலீஸ் ஆக இருக்கிறது. அதற்கான ப்ரோமோஷனுக்காக பல பேட்டிகள் கொடுத்து வருகிறார்.

சமீபத்தில் நடிகை தீபிகா படுகோன் பிரபாஸின் ஸ்பிரிட் படத்தில் இருந்து நீக்கப்பட்டார். அவர் ஒரு நாளுக்கு 8 மணி நேரம் தான் ஷூட்டிங் வருவேன் என கூறியதால் தான் இயக்குனர் சந்தீப் ரெட்டி அவரை நீக்கிவிட்டதாக தகவல் பரவியது.

இது அதிகம் பேசுபொருளான நிலையில் தற்போது பல பிரபலங்கள் தீபிகாவுக்கு ஆதரவாக பேசி வருகின்றனர்.

மணிரத்னம் ஆதரவு

“இந்நிலையில் மணிரத்னம் அளித்த பேட்டியில் தீபிகா கேட்டது சரியான ஒன்று தான் என கூறி இருக்கிறார். அவர் அதை கேட்கும் நிலையில் இருக்கிறார் என மகிழ்ச்சி அடைகிறேன்.”

“அது நியமற்ற கோரிக்கை இல்லை, தேவையான ஒன்று தான். அவருக்கு அது முக்கியமானது, அதை ஏற்றுக்கொண்டு, புரிந்துகொண்டு பணியாற்ற வேண்டும்” என மணிரத்னம் கூறி இருக்கிறார். 

Source: https://cineulagam.com/article/maniratnam-support-deepika-padukone-in-8-hr-work-1748982957

NO COMMENTS

Exit mobile version