Home சினிமா வேட்டையன் படத்தில் ரஜினிக்கு மனைவியாக நடிக்க மஞ்சு வாரியர் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

வேட்டையன் படத்தில் ரஜினிக்கு மனைவியாக நடிக்க மஞ்சு வாரியர் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

0

மஞ்சு வாரியர்

நடிகை மஞ்சு வாரியர் மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமான திரைப்படம் அசுரன்.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த இப்படத்தின் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். இதை தொடர்ந்து அஜித்தின் துணிவு படத்தில் நடித்தார். மேலும் சமீபத்தில் வெளிவந்த வேட்டையன் படத்தில் ரஜினியின் மனைவியாக நடித்திருந்தார்.

வேட்டையன் மஞ்சு வாரியர் சம்பளம்

இப்படம் கடந்த வாரம் வெளிவந்து வசூலில் ரூ. 223 கோடியை கடந்துள்ளது. இந்த நிலையில், வேட்டையன் படத்தில் நடிப்பதற்காக நடிகை மஞ்சு வாரியர் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, வேட்டையன் படத்திற்காக நடிகை மஞ்சு வாரியர் ரூ. 2 கோடி முதல் ரூ. 3 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளார் என சொல்லப்படுகிறது. அடுத்ததாக மஞ்சு வாரியர் நடிப்பில் விடுதலை 2 திரைப்படம் வெளிவரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Source: https://cineulagam.com/article/manju-warrier-salary-for-vettaiyan-movie-1729235750

NO COMMENTS

Exit mobile version