Home இலங்கை சமூகம் தமிழர் பிரதேச கடற்கரையில் கூட்டமாக கரை ஒதுங்கிய டொல்பின்கள்

தமிழர் பிரதேச கடற்கரையில் கூட்டமாக கரை ஒதுங்கிய டொல்பின்கள்

0

Courtesy: nayan

மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள இலுப்பைக்கடவை கடற்கரை
பகுதியை நோக்கி நேற்றைய தினம் சனிக்கிழமை (16) மதியம் ஒரு தொகை டொல்பின்கள்
கூட்டமாக கடற்கரையை வந்தடைந்தன.

இதனை அறிந்த அப்பகுதி கடற்றொழிலாளர்கள்,பொதுமக்கள்,பெண்கள்,சிறுவர்கள்
என அனைவரும் சென்று பார்வையிட்டதோடு,சிறுவர்களுடன் டொல்பின் கள்
விளையாடி மகிழ்ந்தனர்.

இதுவே முதல் தடவை

குறித்த டொல்பின் இனம் மன்னார் மாவட்டத்தில் கரையோர பகுதிக்கு கூட்டமாக
வருகை தந்தமை இதுவே முதல் தடவையாகும்.

 நீண்ட நேரம் இலுப்பைக்கடவை கடற்கரையோரங்களில் கூட்டமாக சுற்றி திரிந்த குறித்த
டொல்பின்களை தமது இருப்பிடம் நோக்கி செல்ல சில கடற்றொழிலாளர்கள் உதவியை
மேற்கொண்டனர்.

காணொளியாக பதிவு

இந்த நிலையில் குறித்த டொல்பின்கள் மீண்டும் கூட்டமாக தமது இருப்பிடத்தை
நோக்கிச் சென்றது.

குறித்த அரிய காட்சியை கடற்றொழிலாளர்கள் தமது கையடக்க தொலைபேசியில் காணொளியாக பதிவு
செய்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

NO COMMENTS

Exit mobile version