ஆறாம் நிலம் (The Sixth Land) திரைப்படம் ‘IBC Cinema’ யூடியூப் தளத்தில் வெளியாகியுள்ளது.
ஆனந்த ரமணன் இயக்கத்தில் உருவான இந்தத் திரைப்படம், போரினால் பாதிக்கப்பட்ட ஒரு இளம் தாயைச் சுற்றி நடக்கும் கதைக்களத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட பெண்கள், குழந்தைகள் மற்றும் தாய்மார்களின் தலைமுறையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் விதமாக கதாபாத்திரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
போரின் விளைவுகள்
அத்துடன், போரின் விளைவுகள் உலகளாவியவை என்பதை பார்வையாளர்களுக்கு இந்த திரைப்படம் உணர்த்துகிறது.
