சீரற்ற வானிலை காரணமாக மன்னார் மாவட்டத்தில் மாடுகள் உட்பட பண்ணை விலங்குகள்
அதிகளவில் உயிரிழந்துள்ளன.
இந்த நிலையில், அவற்றின் இறைச்சி மனித நுகர்வுக்காக சந்தைக்கு வருவதைத்
தடுக்கும் நோக்கில், இன்று முதல் ஒரு வார காலத்திற்கு மன்னார் மாவட்டத்தில்
இறைச்சி விற்பனைக்கு விதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள்
சங்கத்தின் தலைவர் பிரதீப் பொரலஸ்ஸ தெரிவித்துள்ளார்.
வெள்ள அனர்த்தம்
மேலும் இறைச்சியை சேமித்து வைத்திருப்பதற்கும், இறைச்சிக்காக விலங்குகளை
வெட்டுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
வெள்ள அனர்த்தத்தினால் உயிரிழந்த விலங்குகளின் உடலங்கள் மனித நுகர்வுக்காக
விற்கப்படுகிறதா? அல்லது கொண்டு செல்லப்படுகிறதா? என்பதைக் கண்காணிக்கும்
பணியில் நாடு முழுவதும் உள்ள பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தீவிர கவனம்
செலுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இது குறித்து தகவல் இருந்தால், தமது பிரதேசத்தில் உள்ள பொதுச் சுகாதார
பரிசோதகருக்கு அறிவிக்குமாறும் அல்லது 24 மணி நேரமும் இயங்கும் சுகாதார
அமைச்சின் அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் அவசர தொலைபேசி இலக்கமான 1926 இற்கு
அறிவிக்குமாறும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
