மன்னாரில் 2023ஆம் ஆண்டில் 11 கிராம் தூய நிறையுடைய ஐஸ்
போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஒருவருக்கு ஆயுள்
தண்டனை வழங்கி மன்னார் மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி தலைமையில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில்
குற்றத்தின் பாரதூர தன்மையை கருத்தில் கொண்டு சந்தேக நபருக்கு எதிராக குறித்த
தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஆயுள் தண்டனை
சந்தேகநபர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி யூ. ஆர்.டி சில்வா, சட்டத்தரணி ஹுனைஸ்
பாரூக் ஆகியோர் முன்னிலையாகி இருந்தனர்.
வழக்கு தொடுனர் தரப்பில் சட்டமா அதிபர் சார்பில் அரச சட்டவாதி ஆறுமுகம்
தனுஷன் முன்னிலையாகி இருந்தார்.
வழக்கு தொடுனர் தரப்பில் வழக்கு நியாயமான சந்தேகத்திற்கு அப்பால்
நிரூபிக்கப்பட்டதன் அடிப்படையில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
விதிக்கப்பட்டது.
