Home இலங்கை சமூகம் தலைமன்னார் பிரதான வீதி விபத்தில் சிக்கி உயிரிழந்த அருட்தந்தை

தலைமன்னார் பிரதான வீதி விபத்தில் சிக்கி உயிரிழந்த அருட்தந்தை

0

மன்னார் – தலைமன்னார் பிரதான வீதியில் இடம்பெற்ற
விபத்தில் மன்னார் மறைமாவட்ட அருட் பணியாளரும் மன்னார் மடு மாதா சிறிய
குருமடத்தின் உதவி இயக்குனருமான அருட்தந்தை கே.ஜொனார்த்தனன் அடிகளார் (வயது
31) உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்தானது இன்று (07.07.2024) மாலை இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிள் விபத்து

தலைமன்னார் ஆலயத்தில் மாலை நேர திருப்பலியை
ஒப்புக் கொடுத்த நிலையில் மீண்டும் தலை மன்னாரில் இருந்து மன்னார் நோக்கி
மோட்டார் சைக்கிளில் பயணித்த போது மாலை 6.50 மணியளவில் கட்டுக்காரன்
குடியிருப்பு பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்திற்கு உள்ளாகியுள்ளது.

இதன் போது படுகாயமடைந்த அருட்தந்தை மன்னார் மாவட்ட பொது
வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் சடலம் தற்போது மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Source: https://tamilwin.com/article/mannar-madu-mata-priest-died-1720372508

NO COMMENTS

Exit mobile version