Home இலங்கை சமூகம் மன்னார் – மதவாச்சி பிரதான வீதியூடாக பயணிப்பவர்களுக்கு வெளியான அறிவிப்பு

மன்னார் – மதவாச்சி பிரதான வீதியூடாக பயணிப்பவர்களுக்கு வெளியான அறிவிப்பு

0

மன்னார் தொடக்கம் மதவாச்சி வரையான வீதிகளில் வெள்ள நீர் காரணமாக அநேக
இடங்களில் வெள்ள நீரால் வீதி தடைபட்டுள்ளது.

எனவே அப்பாதை ஊடாக பயணம் செய்வோர் பாதுகாப்பை உறுதிப்படுத்தி தங்கள்
பயணங்களை மேற்கொள்ளுமாறு மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப்
பணிப்பாளர் கே.திலீபன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காற்றுடன் கூடிய மழை

மேலும் மல்வத்து ஓயாவின் நீர்மட்டம் (தேக்கம்) 16.’9′ அடியை தாண்டி உள்ளதாலும்
நாச்சதுவ குளத்தின் பாதுகாப்பு கருதி மேலும் வான் கதவுகள் திறக்கப்பட
இருப்பதனாலும் மல்வத்து ஓயா ஆற்றங்கரை ஓரத்தில் தாழ் நிலப் பகுதியில்
இருப்போர் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அவர் கோரிக்கை
விடுத்துள்ளார். 

தொடர்ந்து மன்னார் மாவட்டத்தில் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகின்றமையும்
குறிப்பிடத்தக்கது.       

                              

NO COMMENTS

Exit mobile version