Home இலங்கை சமூகம் மன்னாரில் கவனிப்பார் அற்று இருக்கும் தனிநாயகம் அடிகளாரின் நினைவுத்தூபி

மன்னாரில் கவனிப்பார் அற்று இருக்கும் தனிநாயகம் அடிகளாரின் நினைவுத்தூபி

0

மன்னார் (Mannar) நகர மத்தியில் அமைக்கப்பட்டிருக்கும் தமிழ் வளர்த்த பெருந் துறவியான
தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளாரின் நினைவுத் தூபி காகங்களின் எச்சத்தினால்
அசுத்தம் செய்யப்பட்டு கவனிப்பாரின்றி கிடப்பதாக பொதுமக்கள் குற்றம்
சுமத்துகின்றனர். 

தமிழ்த் தூது தனிநாயகம் அடிகள் என்கிற வண. சேவியர் தனிநாயகம் அடிகளார்
ஈழத்தமிழர்களின் தமிழ் வளர்ச்சி பாதுகாப்பில் பெரும் பங்காற்றி தமிழுக்காக
உயிர் நீத்தவர்.

நினைவுத்தூபி

அவரது தியாகம் உலகறியும் அந்த வகையில் மன்னார் மாவட்டத்தில் சில வருடங்களுக்கு
முன்பு தனிநாயகம் அடிகளாரின் நினைவு தூபி அமைக்கப்பட்டு அவரது நினைவேந்தல்
தினங்களில் மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டு வந்தது.

தற்போது குறித்த நினைவுச் சிலை கவனிப்பார் அற்ற நிலையில் காகங்களின்
எச்சத்தில் மூழ்கிய நிலையில் காணப்படுகின்றது. 

NO COMMENTS

Exit mobile version