Home இலங்கை சமூகம் மன்னார் காற்றாலை விவகாரம்.. ஜனாதிபதிக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மன்னார் காற்றாலை விவகாரம்.. ஜனாதிபதிக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

0

ஜனாதிபதி மன்னார் காற்றாலைக்கு எதிராக
நடவடிக்கை எடுக்காது விட்டால் எதிர்வரும் 19ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்திற்கு
முன் பாரிய போராட்டம் முன்னெடுக்கப்படும் என காலி முகத்திடல் போராட்டத்தை
முன்னின்று நடத்திய அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் தெரிவித்தார்.

மன்னாரில் காற்றாலை மின் கோபுரம் அமைத்தல் மற்றும் கணிய மணல் அகழ்வுக்கு
எதிராக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போராட்டம் இன்று செவ்வாய்க்கிழமை (9) 38ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது.

தொடர் போராட்டம் 

மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்ட இளையோர்கள் மற்றும்
மக்கள் தொடர்ச்சியாக குறித்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். 

குறித்த
போராட்டத்திற்கு நாளாந்தம் ஒவ்வொரு கிராம மக்கள், வர்த்தகர்கள் உள்ளடங்களாக
அனைத்து தரப்பினரும் தொடர்ந்து ஆதரவை வழங்கி வருகின்றனர்.

நேற்று (9) 38 வது நாளாக முன்னெடுக்கப்படும் குறித்த
போராட்டத்திற்கு மன்னார் மாவட்ட சிகை அலங்கரிப்பாளர் கள் சங்கம் முழுமையாக
கடைகளை மூடி ஆதரவு வழங்கி குறித்த போராட்டத்தில் பங்கேற்றனர்.

மேலும் காலி முகத்திடல் போராட்டத்தை முன்னின்று நடத்திய அருட்தந்தை ஜீவந்த
பீரிஸ், காலி முகத்திடல் ‘அரகள’ குழுவினர் , பௌத்த மதகுரு ஆகியோர் கொழும்பில்
இருந்து வருகை தந்து தமது ஆதரவை தெரிவித்தனர்.

NO COMMENTS

Exit mobile version