Home இலங்கை அரசியல் புதிய இலங்கைக்கான ஆரம்பம்: அநுரகுமாரவுக்கு மனோ கணேசன் வாழ்த்து

புதிய இலங்கைக்கான ஆரம்பம்: அநுரகுமாரவுக்கு மனோ கணேசன் வாழ்த்து

0

ஜனாதிபதி தேர்தலில் முன்னிலை வகிக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்கவுக்கு, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தனது எக்ஸ் தளத்தில் மும்மொழியிலும் மனோ எம்.பி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“மக்களின் ஆணையை பெற்று கொண்டீர்கள், வாழ்த்துக்கள்

சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக நாம் கடுமையாக பணியாற்றிய மத்திய, மேல், சப்ரகமுவ, ஊவா மாகாண வாக்காளர்களுக்கு தமிழ் முற்போக்கு கூட்டணி நன்றியை தெரிவிக்கின்றது.

ஜனநாயக செயல்பாடு மிளிர்ந்துள்ளதுடன் அனுரவின் வெற்றி, பன்மைத்துவம், சமூகநீதி ஆகிய கொள்கைகளை உள்ளடக்கிய புதிய இலங்கைக்கான ஆரம்பம் என நம்புகிறேன். 

 

 

Source: https://tamilwin.com/article/mano-ganesan-congratulates-anurakumara-1726989627

NO COMMENTS

Exit mobile version