Home இலங்கை அரசியல் மே மாதத்தில் சிறைக்கு செல்லப்போகும் முக்கிய தலைகள் : ஜனாதிபதி அநுர வெளியிட்ட அறிவிப்பு

மே மாதத்தில் சிறைக்கு செல்லப்போகும் முக்கிய தலைகள் : ஜனாதிபதி அநுர வெளியிட்ட அறிவிப்பு

0

எதிர்வரும் மே மாதத்தில் அதிக எண்ணிக்கையிலான சர்ச்சைக்குரிய வழக்குகள் தாக்கல் செய்யப்படும் என்றும் வழக்கை விசாரித்த பின்னர் குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க (Anura kumara dossanayake) தெரிவித்துள்ளார்.

பெலியத்தயில் நேற்று (29) நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தேசிய மக்கள் சக்தியின் முதலாவது பேரணியில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில்,

அரசுக்கு எதிராக கூச்சலிடுபவர்களே பயப்பிடுகின்றனர்

இதுவரை மூன்று முன்னாள் அமைச்சர்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அரசாங்கத்திற்கு எதிராக இப்போது அதிகம் கூச்சலிடுபவர்கள்தான் அதிகம் பயப்படுகிறார்கள்.

நாட்டை திவாலாக்கியவர்கள் மீண்டும் அரசாங்கங்களை அமைக்க வருகிறார்கள்.

குறையப்போகும் மின்கட்டணம்

யார் வேண்டுமானாலும் கனவு காணலாம். அவை வெறும் கனவுகள்தான். அவை ஒருபோதும் நிஜமாகாது.”

மூன்று முதல் நான்கு ஆண்டுகளில், பிராந்தியத்தில் மிகக் குறைந்த மின்சாரக் கட்டணங்களைக் கொண்ட நாடாக இலங்கை மாறும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.    

NO COMMENTS

Exit mobile version