Home இலங்கை சமூகம் முட்டை விலையில் வீழ்ச்சி: வெளியான புதிய அறிவிப்பு

முட்டை விலையில் வீழ்ச்சி: வெளியான புதிய அறிவிப்பு

0

இன்று (22) முதல் ஒரு முட்டை சந்தைக்கு 42 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எதிர்காலத்தில் முட்டையின் விலையை மேலும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சங்கத்தின் தவிசாளர் ஆர்.எம்.சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், முட்டையின் விலையை கட்டுப்படுத்தும் வகையில் எதிர்காலத்தில் மீண்டும் முட்டையை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முட்டை இறக்குமதி

இதேவேளை, இலங்கைக்கு மீண்டும் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கான தீர்மானம் இன்று அறிவிக்கப்பட உள்ளதாக வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ (Nalin Fernando) குறிப்பிட்டுள்ளார்.  

Source: https://ibctamil.com/article/market-price-of-an-egg-from-today-1721634449

NO COMMENTS

Exit mobile version