Home இலங்கை சமூகம் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருப்பலி நிகழ்வு

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருப்பலி நிகழ்வு

0

புதிய இணைப்பு

கச்சதீவு புனித அந்தோனியார் (St. Antony’s Shrine, Kachchatheevu) ஆலயத்தின் வருடாந்த திருவிழா இன்று(15) காலை ஆரம்பமாகிய நிலையில் இனிதே நிறைவுபெற்றுள்ளது. 

முதலாம் இணைப்பு

வரலாற்றுச் சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் (St. Antony’s Shrine, Kachchatheevu) ஆலயத்தின் வருடாந்த
திருவிழாவின் திருப்பலி நிகழ்வு இன்று (15) காலை ஆரம்பமானது.

அத்துடன் நேற்று (14) கச்சதீவு அந்தோனியார் சிலுவைப்பாதை நிகழ்வும் இரவு 8.30 மணியளவில் கச்சதீவு அந்தோணியார் திருச்சொருவ பவனியும் இடம்பெற்றது.

பெருமளவான பக்தர்கள்

இந்த நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர், யாழ் மாவட்ட பதில் அரசாங்க அதிபர், யாழ். இந்திய துணைத்தூதுவர், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டிருந்தனர்.

இத்திருவிழாவிற்கு இலங்கை மற்றும் இந்தியாவில் இருந்து பெருமளவு பக்தர்கள் வருகை தந்ததுள்ளனர்.

இவ்வருடம் இலங்கையை சேர்ந்த 4,000 யாத்திரிகர்களும் இந்தியாவை சேர்ந்த 4,000 யாத்திரிகர்களும் என மொத்தமாக 8,000 யாத்திரிகர்களுடன் மேலதிகமாக உத்தியோகத்தர்கள், ஏனையோர் என 1000பேர் உள்ளடங்கலாக 9,000 பேர் இதில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/wxBxt_NzTT4

NO COMMENTS

Exit mobile version