இலங்கையின் வட பகுதியான யாழ்ப்பாணத்தில் நடந்த ஒரு முக்கிய மனித உரிமை மீறலாக செம்மணி மனிதப் புதைகுழி பேரவலம் காணப்படுகிறது.
1998ஆம் ஆண்டு, கிருஷாந்தி குமாரசாமி என்ற தமிழ் மாணவி அத்துமீறலுக்கு உள்ளாகி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியாகக் கைது செய்யப்பட்ட இலங்கை முன்னாள் இராணுவ வீரர் சோமரத்ன ராஜபக்சவின் விசாரணையில் அம்பலமான செம்மணி விவகாரம் இன்று சர்வதேசத்திலும் பாரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
செம்மணி விவகாரம் சிறிலங்கா அரசிற்கு தலையிடியாக மாறியதிலிருந்து, அதனை மூடி மறைப்பற்கான எத்தனங்களையும் எடுத்து வருகின்றது.
இந்த நிலையில், செம்மணி விவகாரம் உட்பட, சிறிலங்காவுள் நுழைய அனுமதிக்கப்படாத ஐ. நா அலுவலர்கள் என பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராய்கிறது ஐபிசி தமிழின் “சக்கரவியூகம்”நிகழ்ச்சி.
https://www.youtube.com/embed/fyK4QVCVGWk
