மசாஜ் நிலையம் என்ற போர்வையில் தகாத செயற்பாட்டுக்காக ஈடுபட்ட விடுதியை சுற்றி வளைத்து, இரண்டு பெண்களை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பேலியகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களனி பகுதியில் நேற்று பிற்பகல் நடத்தப்பட்ட சோதனையின் போது இந்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விடுதியை சுற்றி வளைக்க பொலிஸ் அதிகாரி ஒருவரை உளவாளியை நியமித்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள்
விடுதி மேலாளரான பெண் மற்றும் தகாத செயற்பாட்டில் ஈடுபட்ட பெண் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
34 மற்றும் 53 வயதுடைய சந்தேக நபர்கள் களனி மற்றும் இரத்தினபுரி பகுதிகளை சேர்ந்தவர்களாகும்.
பேலியகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
