யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியின் கோப்பாய் பகுதியில் சற்றுமுன்னர் கோர விபத்து இடம்பெற்றுள்ளது.
தனியார் பேருந்தும் சிறிய ரக வாகனமும் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் உயிர் சேதங்கள் ஏற்படவில்லை எனவும் சிலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
