Home இலங்கை சமூகம் ட்ரோன் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய கஞ்சா பயிர்ச்செய்கை

ட்ரோன் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய கஞ்சா பயிர்ச்செய்கை

0

யால தேசிய பூங்காவில் (Yala National Park) மிக நுட்பமாக பயிரிடப்பட்ட இரண்டு கஞ்சா பயிர்ச்செய்கைகளை காவல்துறையினர் ட்ரோன் கமரா (Drone Camera) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காவல்துறை விசேட அதிரடிப்படையின் உடவளவ (Udawalawe) முகாமைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையின் போது 35 பேர்ச்சஸ் மற்றும் 25 பேர்ச்சஸ் பரப்பளவிலான காணியில் கஞ்சா பயிரிடப்பட்டிருந்ததாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

காவல்துறையினர் விசாரணை

குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் எவரும் கைதுசெய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கதிர்காமம் (Kataragama) காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version