Home இலங்கை சமூகம் குருநாகலில் கட்டிடம் ஒன்றில் பாரிய தீ விபத்து

குருநாகலில் கட்டிடம் ஒன்றில் பாரிய தீ விபத்து

0

குருநாகலில் (Kurunegale) உள்ள கட்டிடமொன்றில் இன்று பிற்பகல் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குருநாகல் – கொழும்பு  (Colombo) வீதியில் வதுராகல பகுதியில் அமைந்துள்ள கட்டிடமொன்றிலேயே இவ்வாறு தீப்பரவல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாரிய புகைமூட்டத்துடன் தீ எல்லா திசைகளிலும் பரவிய நிலையில்  மாநகர சபையின் தீயணைப்பு படையினர் இணைந்து தீ பரவலை கட்டுப்படுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.

காவல்துறையினர் விசாரணை

தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிபபிடத்தக்கது.

@lankasrinews சற்றுமுன் குருநாகல் நகரில் பாரிய தீ விபத்து! #kurunegala #news #srilankapolice #srilanka #latestnewsupdates #viral #latestnews #breakingnews #police ♬ original sound – Lankasri News

NO COMMENTS

Exit mobile version