Home இலங்கை சமூகம் இலங்கை தேசிய நூலகத்தில் பாரிய தீ விபத்து

இலங்கை தேசிய நூலகத்தில் பாரிய தீ விபத்து

0

கொழும்பில் (Colombo) அமைந்துள்ள தேசிய நூலக ஆவணவாக்கல் மத்திய நிலையத்தில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தீ விபத்தானது இன்று (10) காலை 10 மணியளவில் நூலகத்தின் கேட்போர் கூடத்துக்கு அருகில் உள்ள அறையில் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, தேசிய நூலக ஆவணவாக்கல் மத்திய நிலையத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் கட்டடத்திலிருந்து வெளியேறியுள்ளனர்.

இந்தநிலையில், கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு படையினர் வருகை தந்து தீயை உடனே கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விபரங்களை  கீழுள்ள காணொளியில் காணலாம்.

 

Source: https://ibctamil.com/article/massive-fire-breaks-out-sl-national-library-1720597608

NO COMMENTS

Exit mobile version