கிளிநொச்சி- தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லாறு பகுதியில் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 240 கிலோவுக்கும் அதிகமான கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இராணுவப் புலனாய்வுப் பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைவாக
தர்மபுரம் பொலிஸார் இன்றைய தினம்(18) சோதனை மேற்கொண்டனர்.
விசாரணை
இதன்போது, குறித்த பகுதியிலுள்ள கைவிடப்பட்ட வீடு ஒன்றின் மலக்குழியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.
மேலும், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய எவரும் கைது செய்யப்படாத நிலையில் விசாரணைகள்
தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
