Home உலகம் பப்புவா நியூ கினியாவில் பாரிய நிலா நடுக்கம்

பப்புவா நியூ கினியாவில் பாரிய நிலா நடுக்கம்

0

பப்புவா நியூ கினியாவில் (New Guinea) பாரிய நில நடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கமானது நேற்று (19) மத்தியம் 2.11 மணியளவில் ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவானதாக ஜெர்மனி (Germany) புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சுனாமி எச்சரிக்கை

195.3 கிமீ ஆழம் கொண்ட இந்த நிலநடுக்கம், 5.49  பாகை தெற்கு அட்சரேகை மற்றும் 147.52 பாகை கிழக்கு தீர்க்கரேகையில் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன் இந்த நிலநடுக்கத்தால் பப்புவா நியூ கினியாவில் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. ஆனால் பொருளிழப்புகள் உள்ளிட்ட பிற பாதிப்புகள் பற்றிய உறுதியான தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை.

முன்னதாக கடந்த 12ம் திகதி, பப்புவா நியூ கினியாவின் பங்குனாவில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 

தென்கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் பெருங்கடலோர பகுதிக்கு உட்பட்ட நிலநடுக்கம் அதிகம் ஏற்பட கூடிய இடத்தில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version