மட்டக்களப்பு (Batticaloa) வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள புத்தங்கேணி கடற்கரையில் பாரிய தாங்கி ஒன்று கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த தாங்கி இன்று (12) கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ராங்கி மீட்பு
இந்தக் கடற்கரையை அண்டிய பகுதியில் பாரிய தாங்கி ஒன்று மிதந்து
கரையொதுங்குவதை அவதானித்த அந்த பகுதி மக்கள் அதனை இழுத்து கரை சேர்த்துள்ளனர்.
இந்தநிலையில், குறித்த தாங்கியை பொலிஸார் மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அண்மைக்காலமாக இவ்வாறான தாங்கிகள் கிழக்கு கடற்கரைகளில் ஒதுங்கி வருவது
குறிப்பிடத்தக்கது.
