Courtesy: Sivaa Mayuri
மாத்தளையில் புனரமைக்கப்பட்ட நந்திமித்ர ஏகநாயக்க சர்வதேச செயற்கை ஹொக்கி மைதானம், எந்தவொரு அரசியல்வாதியும் இன்றி நேற்று (05.12.2024) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
ஸ்ரீ லங்கா கிரிக்கெட் மற்றும் ஆசிய ஹொக்கி கூட்டமைப்பு ஆகிய நிறுவனங்களால் முறையே 110 மில்லியன் மற்றும் 50 மில்லியன் ரூபாய்கள் இதற்காக பங்களிக்கப்பட்டுள்ளன.
மைதானம் இப்போது ஒரு நவீன செயற்கை ஹொக்கி புல்வெளியைக் கொண்டு, சர்வதேச தரத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
பாரம்பரியத்துக்கு புறம்பான நிகழ்வு
இதேவேளை, பாரம்பரியத்துக்குப் புறம்பாக, சிறப்பு அழைப்பாளர்களோ, அரசியல் பிரமுகர்களோ இல்லாமல் நேற்றைய விழா நடைபெற்றது.
அகில இலங்கை ரீதியில் 16 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பாடசாலைகளுக்கான ஹொக்கி போட்டியுடன் மைதானம் திறந்து வைக்கப்பட்டது.