பொலநறுவை-திம்புலாகல கல்வி வலயத்திற்குள் உள்ள அரலகங்வில கல்விப் பிரிவில்,
பாடசாலை ஒன்றின் கணித ஆசிரியரொருவர் 10ஆம் வகுப்பு மாணவிகள் எட்டு பேரை தவறான முறைக்குட்படுத்திய வழக்கில், பொலிஸாரால் இன்று(7) கைது
செய்யப்பட்டுள்ளார்.
ஆசிரியரின் நடத்தை குறித்து பெற்றோர்கள் அளித்த பல முறைப்பாடுகளை தொடர்ந்து
இந்த கைது நடந்ததாக அரலகங்வில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆசிரியர் கைது
ஆசிரியர் பல சந்தர்ப்பங்களில் சம்பந்தப்பட்ட மாணவிகளை தாக்கியதாகவும்
விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் இன்று பொலன்னறுவை நீதவான் நீதிமன்றத்தில்
முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
