Home இலங்கை சமூகம் அமரர் மாவை சேனாதிராஜாவிற்கு சுமந்திரன் இரங்கல்

அமரர் மாவை சேனாதிராஜாவிற்கு சுமந்திரன் இரங்கல்

0

மறைந்த இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவரும் முன்னால் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவிற்கு (Mavai Senathiraja) தமிழரசு கட்சியின் ஊடக பேச்சாளர் எம். ஏ சுமந்திரன் (M. A. Sumanthiran) தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வைத்து தனது இரங்கல் செய்தியினை வெளியிட்டுள்ளார்.

குறித்த பதிவில், “மாவை சேனாதிராஜா பேரினவாதத்திறகு எதிரான மாபெரும் அடையாளமாக ஆறு தசாப்தங்களுக்கு மேலாகத் திகழ்ந்தவரும் 1970களில் பல ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவரும் ஆவார்.

அவரது மறைவினையொட்டிய எனது ஆழ்ந்த அனுதாபங்கள் தெரிவித்துக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

நரம்பு வெடிப்பு

மாவை சேனாதிராஜா வீட்டில் தவறி விழுந்த நிலையில், தலையில் நரம்பு வெடிப்பு ஏற்பட்டதால் யாழ். போதனா வைத்திய சாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக கடந்த செவ்வாய்க் கிழமை அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று இரவு உயிரிழந்தார்.

இந்நிலையில் உயிரிழந்த மாவை சேனாதிராஜாவின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக மாவிட்டபுரத்திலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

அத்தோடு அரசியல் பிரமுகர்கள், வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்மை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version