Home இலங்கை சமூகம் தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் மன்னாரில் மாவீரர் நினைவேந்தல் வார நிகழ்வு!

தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் மன்னாரில் மாவீரர் நினைவேந்தல் வார நிகழ்வு!

0

Courtesy: Nayan

மாவீரர் நினைவேந்தல் வாரத்தையொட்டி இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளை ஏற்பாடு செய்த மாவீரர் வார நினைவேந்தல் நிகழ்வு இன்று (23.11.2025) மன்னார் தொடருந்து வீதியில் அமைந்துள்ள கட்சியின் மன்னார் கிளை அலுவலகத்தில் இடம்பெற்றது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளை தலைவரின் தலைமையில் குறித்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது மாவீரர்கள் நினைவாக பொதுச்சுடர் ஏற்றப்பட்டு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

அஞ்சலி

குறித்த நிகழ்வில் இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், இலங்கை தமிழரசுக் கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் என பலர் கலந்துக்கொண்டு அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version