மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் முன்னாள்
தலைவருமான மாவை சேனாதிராசாவின் 83 வது ஜனன தினத்தை முன்னிட்டு காங்கேசன்துறை
தமிழரசுக்கட்சி தொகுதிக்கிளையினரால் மரநடுகை மேற்கொள்ளப்பட்டது.
நேற்றையதினம்(27) நண்பகல் 12.00 மணியளவில் வலி வடக்கு தச்சன்காட்டு சந்திக்கு
அண்மித்த பகுதியில் வீதியின் இருமருங்கிலும் மரக்கன்றுகள் நாட்டப்பட்டது.
மரநடுகை
இந்த நிகழ்வில் வலி வடக்கு தவிசாளர் சோ.சுகிர்தன், வலி வடக்கு தமிழரசுக்
கட்சிசார் பிரதேசசபை உறுப்பினர்கள் மற்றும் தமிழரசுக் கட்சி ஆதரவாளர்கள்
போன்றோர் கலந்துகொண்டனர்.
