யாழில் (Jaffna) சட்டவிரோதமான சொத்து குவிப்புடன் தொடர்புள்ளவர்கள் என
சந்தேகிக்கப்படுபவர்களிடம் கை துப்பாக்கிகள் இருக்கின்றதா என்ற கோணத்தில்
காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இந்தநிலையில், யாழில் சட்டவிரோதமாக சொத்து குவித்தார் எனும் சந்தேகத்தில் நபர் ஒருவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, அவரது தொலைபேசிக்கு இன்னொரு நபரிடம் இருந்து வாட்சப் மூலம் கைத் துப்பாக்கி ஒன்றின் புகைப்படம் அனுப்பப்பட்டுள்ளது.
லேதிக விசாரணை
இதையடுத்து, காவல்துறையினர் லேதிக விசாரணைகளை குறித்த சந்தேக நபரிடம் மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது, கைத் துப்பாக்கியின் படத்தை தனக்கு அனுப்பியவர் பெயரை சந்தேக நபர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தின் உத்தரவைப் பெற்று மேலதிக
நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கைகள் எடுத்து வருவதாக காவல்துறை
வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
