வருகிற மே 16ம் தேதி தமிழ் சினிமாவிலிருந்து திரையரங்கில் வெளிவரவிருக்கும் திரைப்படங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
மாமன்
இயக்குநர் பிரஷாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் சூரி, ஐஸ்வர்யா லட்சுமி, ராஜ்கிரண், ஸ்வாசிகா ஆகியோர் நடித்துள்ள படம் மாமன். இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளிவந்து படத்தின் மீது எதிர்பார்ப்பை மிகப்பெரிய அளவில் உண்டாக்கியுள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் மே 16ம் தேதி இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிறதா என்று.
தலைவருடன் படம் பண்ணு.. லோகேஷிடம் முதல் நபராக கூறிய விஜய்
DD Next Level
ஹாரர் மற்றும் நகைச்சுவை கதைக்களத்தில் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் DD Next Level. இப்படத்தை ஆர்யா தயாரித்துள்ளார். மேலும் பிரேம் ஆனந்த் இப்படத்தை இயக்கியுள்ளார்.
ஜோரா கைய தட்டுங்க
யோகி பாபு கதாநாயகனாக நடித்து வினீஷ் மில்லேனியம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ஜோரா கைய தட்டுங்க. மே 16ம் தேதி வெளிவரவிருக்கும் மூன்று திரைப்படங்களில் இப்படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உள்ளது.
