இலங்கை தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் இன்றையதினம்(16) சங்கானை நகரப் பகுதியில்
முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி வழங்கப்பட்டது.
இறுதி யுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளின் ஆத்மா
சாந்திக்காக இரண்டா நிமிட அக வணக்கம் செலுத்தப்பட்டது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
அதன்பின்னர்
மக்களுக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.
இதில் வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சுகிர்தன், பிரதேச சபையின்
உறுப்பினர்களான ஜெயந்தன், கந்தையா இலங்கேஸ்வரன், திரு.ஜெசிந்தன், ஆதவன் உள்ளிட்ட கட்சியின் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.
திருகோணமலை
நிகழ்வு
கடந்த கால யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூர்வதோடு, அந்த காலத்தில்
நிகழ்ந்த போர் குற்றங்களுக்கு நீதியை கோரும் நோக்குடன், ஒவ்வொரு ஆண்டும்
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினால் (NECC) முள்ளிவாய்க்கால் நினைவு
கஞ்சி நிகழ்வு ஒழுங்கமைக்கப்படுகிறது.
இந்நிலையில், நேற்றையதினம்(15) திகதி, திருகோணமலை மாவட்டத்தின் மூதூர்
பிரதேசத்திலுள்ள இறால்குழி கிராமத்தில், காலை 9.00 மணியளவில், வடக்கு கிழக்கு
ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி
நிகழ்வில் மொத்தம் 39 பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
துயரத்தை பகிர்ந்து
கொள்ளும் நினைவு நிகழ்வாக மட்டுமல்லாது, நீதி தேடும் ஒரு சமூக அழைப்பாகவும்
இந்நிகழ்வு அமைந்தது.
பருத்தித்துறை முனைக் கடற்கரை
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் நான்காம் நாள் நினைவேந்தல் நேற்று
பருத்தித்துறை முனை கடற்கரையில் நடைபெற்றது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
இதில் கட்சியின் உறுப்பினர்கள், உள்ளூராட்சி சபைகளுக்குப் புதிதாகத் தெரிவு
செய்யப்பட்டுள்ள உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
வல்வெட்டித்துறை
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் நான்காம் நாள் நினைவேந்தல்
வல்வெட்டித்துறையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் முன்னெடுக்கப்பட்டது.
நேற்று(15) வியாழக்கிழமை வல்வெட்டித்துறை பஸ் நிலையத்தில் வைத்து உயிரிழந்தோரை
நினைவுகூர்ந்து சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், முள்ளிவாய்க்கால்
நினைவுக் கஞ்சியும் காய்ச்சி பரிமாறப்பட்டது.
இந்த நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம்,
செல்வராசா கஜேந்திரன், சட்ட ஆலோசகர் நடராஜா காண்டீபன் உள்ளிட்ட பலரும்
கலந்துகொண்டனர்.
அஞ்சலி
விசுவமடு சுண்டைகுளம் சந்தி பகுதியில் வர்த்தகர்கள் இளைஞர்கள் இனைந்து முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி வழங்கியுள்ளனர்.
இதன் போது இறந்த எம் உறவுகளுக்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
