Home இலங்கை சமூகம் உழைப்பவர் உரிமைகள் வெல்ல, தமிழர் தேசம் தலைநிமிர உறுதி கொள்வோம்: டக்ளஸ் சுட்டிக்காட்டு

உழைப்பவர் உரிமைகள் வெல்ல, தமிழர் தேசம் தலைநிமிர உறுதி கொள்வோம்: டக்ளஸ் சுட்டிக்காட்டு

0

உழைக்கும் மக்களின் உரத்த உணர்வுகளை உலகிற்கு பிரகடனம் செய்யும் மே நாளில்,
தமிழர் தேசம் தலைநிமிர – சரியான திசைவழியில் அணி திரள உறுதி கொள்வோம் என ஈழ
மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம், கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ்
தேவானந்தா தெரிவித்துள்ளார்.

மே தினம் குறித்து டிவர் வெளியிட்டுள்ள ஊடக செய்தியிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார்.

கடற்றொழில் அமைச்சரின் மே
தினச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

கொழும்பு உள்ளிட்ட மேல் மாகாண மக்களுக்கு வெளியான முக்கிய அறிவித்தல்

உரத்த நியாயங்கள்

“உலகெங்கும் விரவிக் கிடந்த தொழிலாளர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகள் தகர்க்க –
உரத்த நியாயங்கள் வெல்ல, அனைத்து மக்களும் ஒன்றிணைந்து முயன்றதற்கான
வெகுமதியே, இன்றைய மே தினமும், தொழிலாளர் உரிமைகளுமாகும்.

இந்த வரலாற்று
படிப்பினை எமக்கும் முன்னுதாரணமாய் நிமிர்ந்து நிற்கின்றது.

சரிநிகர் சமனென்ற உரிமைகளை பெற்றவர்களாய் எமது மக்கள், எமது தாயகமெங்கும்
உறுதியாக வாழ வேண்டுமாயின் பலமான பொருளாதாரம் அவசியம் என்ற புரிதலின்
அடிப்படையிலேயே, எமது மக்களுக்கான பல்வேறு பொருளாதார கட்டமைப்புக்களை
உருவாக்கும் முயற்சியில் உறுதியுடன் செயற்பட்டு வருகின்றோம்.

ஆனால், பிரச்சினைகளற்ற – கௌரவமான வாழும் சூழலை தமிழ் மக்கள் உணர்ந்து
கொள்வார்களாயின், தங்களுடைய வெற்று அரசியல் சூனியமாகிவிடும் என்று அஞ்சுகின்ற
சிலர், எமது முயற்சிகளுக்கு சேறடிக்கும் கனவோடு ஒன்றுபட்டும் நிற்கின்றனர்.

எரிபொருள் விலையில் இன்று நள்ளிரவு முதல் மாற்றம்

வடுக்களுடன் இருக்கும் மக்கள்

காலம் காலமாக ஏமாற்றப்பட்ட வடுக்களுடன் இருக்கும் எமது மக்கள், தங்களுடைய
தீர்மானங்களே வடுக்களை ஏற்படுத்துகின்றவர்களை வலுப்படுத்திக்
கொண்டிருக்கின்றது என்ற உண்மையை உணர்ந்து கொள்வதன் மூலம் சரியானவர்களுக்கு
மேலும் பலம் சேர்க்க வேண்டும்.

அன்றாடப் பிரச்சினைகள், அபிவிருத்தி, அரசியல் தீர்வு போன்றவற்றை நிவர்த்தி
செய்யும் எதிர்பார்ப்புக்களை மனதில் சுமந்திருக்கும் எமது மக்கள்,
எமது மதிநுட்ப சிந்தனைகளை ஏற்று நடைமுறை சாத்திய வழிமுறையில் திரண்டெழ
வேண்டும்.

தாயக தேசமெங்கும் தமது எதிர்பார்ப்புக்களை நிலைநிறுத்த எமது மக்கள் இனி
வரும் கலங்களை தம் கைகளில் எடுப்பர்” என தெரிவித்துள்ளார்.

வாகன இறக்குமதிக்கான அனுமதி! சபாநாயகர் உறுதிப்படுத்தியுள்ள விடயம்

மேலும், ஈழ மக்கள்
ஜனநாயகக் கட்சி நாளையதினம் (01) தமது மே தினக் நிகழ்வுகளை பருத்தித்துறையில்
பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை
சிறீரங்கேஸ்வரன் கூறுகையில்,

வாகனப் பேரணி

எமது கட்சியின் இவ்வாண்டுக்கான தொழிலாளர் தினம் பருத்தித்துறை நகரில்
பருத்தித்துறை பல நோக்கு கூட்டுறவு சங்க கேட்போர் கூடத்தில் நடைபெற ஏற்பாடுகள்
செய்யப்பட்டுள்ளன.

இதேநேரம் எமது மேதின நிகழ்வுகளில் ஒரு அங்கமாக யாழ்ப்பாணத்திலுள்ள எமது
கட்சியின் தலைமை அலுவலக முன்றலிலிருந்து வாகனப் பேரணி ஒன்று ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது.

இப்பேரணியானது யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதான வீதி வழியாக சென்று
பருத்தித்துறை நகரை அடையவுள்ளது.

இதன்பின்னர் பலநோக்கு கூட்டறவு சங்க கேட்போர் கூடத்தில் ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளள நிகழ்வுகள் நடைபெறும்
குறிப்பாக தொழிற் சங்ககங்களின் பிரதிநதிதிகள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள்
உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் தொழிலாளர் உரிமைகளை வலியுறுத்தி
சிறப்புரைகளாற்றவுள்ளனர் என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW

NO COMMENTS

Exit mobile version