Home இலங்கை சமூகம் வடக்கில் தொடர்ந்த மே தின நிகழ்வுகள்

வடக்கில் தொடர்ந்த மே தின நிகழ்வுகள்

0

தமிழ்தேசிய மக்கள் முண்ணனி –  வவுனியா

தமிழ்தேசிய மக்கள் முண்ணனியின் பிரதான மேதின ஊர்வலமும் பொதுக்கூட்டமும் வவுனியாவில் இன்று
எழுச்சியுடன் இடம்பெற்றது.

முன்னதாக வவுனியா பண்டாரவன்னியன் சிலை முன்பாக ஆரம்பமான மேதின ஊர்வலம் அங்கிருந்து குருமன்காடு கலைமகள் விளையாட்டு மைதானம்வரை சென்றது.அங்கு மேதின கூட்டம் இடம்பெற்றது.

முண்னணியின் வவுனியா மாவட்ட முக்கியஸ்தர் தவபாலன் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கயேந்திரன், முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ், சட்டத்தரணி க.சுகாஸ்,மற்றும் தொண்டர்கள்,ஆதரவாளர்கள் பெருமளவான பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

பேரணியில் கலந்துகொண்டவர்கள் எங்கள் நிலம் எமக்கு வேண்டும், இனப்படுகொலைக்கு சர்வதேச நீதிவேண்டும்,வெடுக்குநாறி எங்கள் சொத்து போன்ற கோசங்களையும் எழுப்பியிருந்தனர். 

மே தின கூட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி பக்கம் தாவிய மொட்டு எம்.பி

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – பருத்தித்துறை

தொழிலாளர் தினத்தினை முன்னிட்டு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி இன்றையதினம் (01) தமது மே தின நிகழ்வுகளை பருத்தித்துறையில் பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்திருந்தது.

அதனடிப்படையில் ஈ.பி.டி.பியின் இவ்வாண்டுக்கான தொழிலாளர் தினம் பருத்தித்துறை நகரில் பருத்தித்துறை பல நோக்கு கூட்டுறவு சங்க கேட்போர் கூடத்தில் இன்று பிற்பகல் 3 மணியளவில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு பருத்தித்துறை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் கட்சியின் ஊடக பேச்சாளருமான ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் தலைமைதாங்கியிருந்தார்.

முன்பதாக மேதின நிகழ்வுகளில் ஒரு அங்கமாக யாழ்ப்பாணத்திலுள்ள கட்சியின் தலைமை அலுவலக முன்றலிலிருந்து அழைக்கப்பட்ட நூற்றுக்கணக்கான மக்களின் பிரசன்னத்துடன் வாகனப் பேரணி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு, யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதான வீதி வழியாக பருத்தித்துறை நகரை சென்றடைந்தது. 

தலைமன்னார் ஊர்மனை கிராம மக்கள்

தலைமன்னார் ஊர்மனை கிராம மக்கள், இம்முறை மே தினத்தை வெகு சிறப்பாக கொண்டாடியுள்ளனர்.

குறித்த கிராம மக்கள் கடந்த காலங்களில் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் பொருளாதார பின்னடைவு மற்றும் இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறலால் ஏற்பட்ட பாதிப்புகள் உள்ளடங்களாக பல்வேறு பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் அந்த கிராம மக்கள் இன்றைய தினம் (1) மே தினத்தை ஒன்று திரண்டு மிகவும் ஒற்றுமையாக கொண்டாடி மகிழ்ந்து உள்ளனர்.

தலைமன்னார் ஊர்மனை கிராமத்தின் புனித லோறன்சியார் ஆலய பங்குத்தந்தை சந்தியோகு மார்க்கஸ் அடிகளார் தலைமையில் புனித லோரன்சியார் மீனவ கூட்டுறவு சங்கம் மற்றும் லோரன்சியார் விளையாட்டு கழகம் கூட்டாக இணைந்து மே தின நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தனர்.

சஜித் உடனான விவாதம்: பகிரங்கமாக சாடிய அனுர

புதிய மார்க்சிச லெனினிஷக் கட்சி – யாழ்ப்பாணம்

புதிய மார்க்சிச லெனினிஷக் கட்சியின் மே தின ஊர்வலம் இன்று மாலை யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது.

ஆரியகுளம் சந்தியிலிருந்து யாழ்ப்பாணம் றிம்மர் மண்டபம் வரை பேரணியாக சென்று ரிம்மர் மண்டபத்தில் நிகழ்வுகள் இடம்பெற்றன.

உழைக்கும் மக்கள் ஒன்றிணைவோம் நாட்டின் வளங்களை பாதுகாப்போம் எனும் தொனிப் பொருளுடன் புரட்சிகர மேதினம் முன்னெடுக்கப்பட்டது.

புதிய மாக்சிய லெனினிஷக் கட்சியின் வட பிராந்திய செயலாளர் செல்வம் கதிர்காமநாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், அரசியல் குழு உறுப்பினர்களான க.தணிகாசலம், சட்டத்தரணி சோ.தவராஜா, எம்.இராசநாயகம், ச.நித்திகா, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

காவல்துறையினரின் முன்னிலையில் பண்ணையாளர்களை அச்சுறுத்திய பிள்ளையானின் மோட்டார் சைக்கிள் அணி!

சமத்துவக் கட்சி-கிளிநொச்சி

சமத்துவக் கட்சியின் மே தினக் கூட்டம் கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள பசுமை பூங்காவில் இன்று (01) பிற்பகல் 2 மணிக்கு சிறப்பாக இடம்பெற்றது.

சமத்துவக் கட்சியின் தலைவர் சு. மனோகரன் தலைமையில் ஆரம்பமான மே தினக் கூட்டமானது ஒடுக்கும் அதிகாரத்தை
உடைதெறிவோம், உரிமையை மீட்டெடுப்போம் எனும் தொனிப்பொருளில் கிளிநொச்சி

மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தம்
தொழிற்சங்கங்கள், பொது அமைப்புக்கள் மற்றும் ஆயிரக் கணக்கான மக்களின்
பங்குபற்றுலுடன் நடைபெற்றது.

நிகழ்வில் கூட்டுறவு அமைப்புகள், கடற்றொழில் அமைப்புக்கள், ஆசிரிய
தொழிற்சங்கம், விவசாய அமைப்புக்கள், பெண் அமைப்புக்கள் உள்ளிட்ட பல
அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு உரையாற்றியதோடு, கட்சியின் மே
தின பிரகடனமும் வாசிக்கப்பட்டது.

தொடர்ந்து பிரதம விருந்தினர் உரையினை
சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு.
சந்திரகுமார் நிகழ்த்தினார். 

மின்சார கட்டண குறைப்பு: எடுக்கப்படவுள்ள தீர்மானம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!

NO COMMENTS

Exit mobile version