Home இலங்கை சமூகம் யானை மனித மோதலைத் தடுக்கும் நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடல்

யானை மனித மோதலைத் தடுக்கும் நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடல்

0

யானை மனித மோதலைத் தடுக்கும் வகையில் மனிதர்களை விலங்குகளிடமிருந்து இருந்து
பாதுகாப்பது தொடர்பாகவும் அதேபோல விலங்குகளை மனிதர்களில் இருந்து பாதுகாப்பது
தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது.

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மாயவனூர் கிராம அலுவலர்
பிரிவில் குறித்த கலந்துரையாடல் இன்று (05-08-2025) பகல் 10 மணிக்கு
நடைபெற்றது

இதில் குறிப்பாக காட்டு யானைகளிடமிருந்து மக்களையும் பயிர்களையும்
பாதுகாக்கும் வகையில் யானை வேலிகளை அமைப்பதற்கான வேலைகள்
ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குறித்த பிரதேசத்தில் 22 கிலோமீட்டர் நீளமான யானை வேலி அமைப்பதற்கான
ஆரம்பகட்ட நடவடிக்கைகள் முன்னெடுத்து வருகின்றது.

இந்த வேலைகளை விரைவாக முன்னெடுப்பது தொடர்பிலும் எதிர்காலத்தில் சிறுத்தை
மற்றும் யானை தாக்கம் ஆகியவற்றிலிருந்து மக்களை பாதுகாப்பது தொடர்பிலும்
கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.

இக்கலந்துரையாடலில் வன வளத்திணைக்கள அதிகாரிகள் வன ஜீவராசிகள் திணைக்கள
அதிகாரிகள் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு மற்றும் குறித்த 22
கிலோமீட்டர் யானை வேலிகள் அமைகின்ற பகுதிகளில் இருக்கின்ற கிராம அலுவலர்
பிரிவுகளை சேர்ந்த கிராம அலுவலர்கள் பிரதேச மக்கள் எனப் பலர் கலந்து
கொண்டனர்.

நல்லூர் கந்தசுவாமி கோவில் 8ஆம் நாள் மாலை திருவிழா

NO COMMENTS

Exit mobile version