Home இலங்கை சமூகம் கல்லூண்டாயில் அதிகளவில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்!

கல்லூண்டாயில் அதிகளவில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்!

0

யாழ்ப்பாணம் மாநகர சபையினால் கல்லூண்டாயில் ஏராளமான மருத்துவ கழிவுகள் கொட்டப்படுகின்றமை உறுதியாகியுள்ளது.

கழிவுப் பொருட்கள் சேமிக்கப்படும் இடமான
கல்லூண்டாய் பகுதியில் பல்வேறு முறைகேடுகள் இடம்பெறுகின்றன.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றையதினம்(29) அந்தப் பகுதி மக்கள், மானிப்பாய்
பிரதேச சபையின் மக்கள் பிரதிநிதிகள் ஆகியோர் இணைந்து மாநகர சபையின்
கழிவகற்றும் வாகனங்களை வழிமறித்தனர்.

மருத்துவ கழிவுகள்

இதனால் மாநகர சபையின் உறுப்பினர்கள்,
பிரதேச சபையின் உறுப்பினர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே முரண்பாடு
ஏற்பட்டது.

பின்னர் குறித்த பகுதியை பார்வையிடுவதற்கு பிரதேச சபையின் உறுப்பினர்கள்,
யாழ்ப்பாணம் மாநகர சபையின் உறுப்பினர்கள், கல்லூண்டாய் பகுதி சமூக மட்ட
அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளே சென்றனர்.

அங்கு மக்கள் குறிப்பிட்டது போன்று ஏராளமான மருத்துவ கழிவுகள் இருப்பது
அவதானிக்கப்பட்டதுடன் குப்பைகள் தரம் பிரிக்கப்படாமல் ஒன்றாக
கொட்டப்பட்டு இருந்ததையும் காணக்கூடியதாக இருந்தது.

NO COMMENTS

Exit mobile version