Home இலங்கை சமூகம் மருந்துகளின் பற்றாக்குறையுடன் போராடும் சுகாதார அமைச்சு

மருந்துகளின் பற்றாக்குறையுடன் போராடும் சுகாதார அமைச்சு

0

Courtesy: Sivaa Mayuri

சுகாதார அமைச்சு பல அத்தியாவசிய மருந்துகள் உட்பட பல மருந்துகளின் பற்றாக்குறையுடன் போராடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமைச்சின் மருந்து விநியோக பிரதிப் பணிப்பாளர் நாயகம்  ஜி. விஜேசூரிய இதனை குறிப்பிட்டுள்ளார்.

மருந்துப் பற்றாக்குறையால் பல மருத்துவமனைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதால் நிலைமை கட்டுக்குள் உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பற்றாக்குறையாக உள்ள மருந்துகள்

மருத்துவ விநியோக பிரிவில் தற்போது சுமார் 130 மருந்துகள் பற்றாக்குறையாக உள்ளன.

அதே நேரத்தில் மருத்துவமனைகளில் சுமார் 85 மருந்துகள் பற்றாக்குறையாக உள்ளன  என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பற்றாக்குறையை எதிர்கொள்ளும் சில மருந்துகளுக்கு மாற்றீடுகளைப் பயன்படுத்த அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். 

 எனினும், 14 உயிர்காக்கும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு இல்லை என விஜேசூரிய குறிப்பிட்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version