Home சினிமா ஹெலிகாப்டர் விபத்தில் இருந்து உயிர் தப்பிய நடிகை மீனா.. அவரே பகிர்ந்த அதிர்ச்சி தகவல்

ஹெலிகாப்டர் விபத்தில் இருந்து உயிர் தப்பிய நடிகை மீனா.. அவரே பகிர்ந்த அதிர்ச்சி தகவல்

0

நடிகை மீனா

நடிகை மீனா, குழந்தை நட்சத்திரமாக பல படங்கள் நடித்து பின் நாயகியாக களமிறங்கியவர்.

இன்று இவர் தனது 49வது பிறந்தநாளை கொண்டாடுகிறார், அவருக்கு பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

கிடைக்கும் நல்ல கதைகளில் நடிப்பதும், போட்டோ ஷுட் நடத்துவதும், சுற்றலா செல்வதும் என பிஸியாகவே உள்ளார் மீனா.

படங்களை தாண்டி நிறைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு வருகிறார்.

பகீர் தகவல்

சமீபத்தில் நடிகை மீனா தெலுங்கில் சிம்ரன், மகேஷ்வரியுடன் இணைந்து ஒரு ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்டார். அதில் அவர் ஒரு பகீர் தகவலை பகிர்ந்துள்ளார். அந்த நிகழ்ச்சியில் மறைந்த நடிகை சவுந்தர்யாவுடன் மீனா எடுத்த புகைப்படம் குறித்து கேட்கப்பட்டது.

அப்போது மீனா பேசும்போது, எங்களுக்குள் ஆரோக்கியமான போட்டி இருந்தது. சவுந்தர்யா நல்ல நபர், எனக்கு அற்புதமான தோழி. அவரது மறைவுச் செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன்.

அன்றைய தினம் நடந்த பிரச்சாரத்திற்கு சவுந்தர்யாவுடன் வருமாறு என்னையும் அழைத்தார்கள். ஆனால் சூழ்நிலை காரணமாக அதனை தவிர்த்து விட்டதாகவும் நடிகை மீனா கூறியுள்ளார்.  

NO COMMENTS

Exit mobile version