Home இலங்கை அரசியல் ஜெய்சங்கருக்கும் தமிழ்க் கட்சிகளுக்கும் இடையிலான சந்திப்பு! உண்மைகளை அம்பலப்படுத்திய கஜேந்திரகுமார்

ஜெய்சங்கருக்கும் தமிழ்க் கட்சிகளுக்கும் இடையிலான சந்திப்பு! உண்மைகளை அம்பலப்படுத்திய கஜேந்திரகுமார்

0

தேசிய மக்கள் சக்தியினுடைய ஒற்றையாட்சிக்குள்ளே தமிழ் அரசியலை முடக்குகின்ற நிகழ்ச்சிநிரலுக்கு தமிழரசுக்கட்சியும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியும் துணைப்போகின்றன என்று நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இருநாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாட்டுக்கு வருகைதந்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கருக்கும் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு நேற்றுமுன்தினம் (23) கொழும்பில் நடைபெற்றது.

அந்த சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் குறித்துத் தெளிவுபடுத்தும் நோக்கில் இன்று (24) கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தில் கொழும்பு இல்லத்தில் செய்தியாளர் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மக்களுடைய பெயரில் இந்த அநியாயம் தொடர்கின்ற வரையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு சம்மந்தமாக முன்னேற முடியாது.

தமிழ்நாட்டில் இந்தவிடயம் தொடர்பில் ஏற்பட்ட முன்னேற்றத்தையும் இந்த செயற்பாடுகள் மழுங்கடிக்கின்றன்.

நேற்றைய சந்திப்பிப்பில் இந்த கட்சிகள் ஒற்றையாட்சியைதான் வலியுறுத்தின.

இந்த போக்கு தொடர்கின்ற வரை கட்டமைப்பு சார் இனப்படுகொலையை தடுக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயங்கள் தொடர்பில் முழுமையான தகவல்களுக்கு கீழுள்ள காணொளியை காண்க..

NO COMMENTS

Exit mobile version