Home சினிமா மெய்யழகன் படத்தை தொடர்ந்து பிரேம்குமார் இணையும் நடிகர் யார் தெரியுமா?… அட இவரா?

மெய்யழகன் படத்தை தொடர்ந்து பிரேம்குமார் இணையும் நடிகர் யார் தெரியுமா?… அட இவரா?

0

பிரேம்குமார்

தமிழ் சினிமாவில் 2009ம் ஆண்டு பசங்க திரைப்படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக தனது சினிமா பயணத்தை துவங்கியவர் பிரேம்குமார்.

அதன்பின் வர்ணம், சுந்தர பாண்டியன், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், ரம்மி, ஒரு பக்க கதை என ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் 96 படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

முதல் படத்தின் மூலம் மக்களின் கவனத்தை பெற்றவர் அடுத்து கார்த்தியை வைத்து மெய்யழகன் என்ற படத்தை இயக்கி வெற்றிக்கண்டார்.

ஈஸ்வரி பற்றி வந்த போன் கால், பதற்றத்தில் நந்தினி, என்ன ஆனது… எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ

அடுத்த படம்

மெய்யழகனை தொடர்ந்து பிரேம்குமார் அடுத்து விக்ரமின் 64வது படத்தை இயக்க இருப்பதாகவும், 96 படத்தின் 2ம் பாகத்தை இயக்க உள்ளார்.

இப்படங்களை தொடர்ந்து பிரேம்குமார் அடுத்து தெலுங்கு சினிமாவின் டாப் நடிகரை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.

அதாவது நடிகர் நானியிடம், பிரேம்குமார் கதை கூறியிருப்பதாகவும், தற்போது இவர்களது கூட்டணி குறித்து பேச்சு வார்த்தையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

NO COMMENTS

Exit mobile version