Home முக்கியச் செய்திகள் யாழில் சட்டத்தரணி தொடர்பாக சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய நபருக்கு நேர்ந்த கதி

யாழில் சட்டத்தரணி தொடர்பாக சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய நபருக்கு நேர்ந்த கதி

0

யாழ்ப்பாண (08.06.2025) சட்டத்தரணி ஒருவர் குறித்து பொய்யான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு அவதூறு பரப்பிய குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கை நேற்றைய தினம் (08.06.2025) ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இணுவில் பகுதியை சேர்ந்த சட்டத்தரணி ஒருவர் போலி உறுதிகளை நிறைவேற்றியதாக
சட்டத்தரணியின் புகைப்படத்துடன் போலியான தகவல்களுடன் சமூக வலைத்தளங்களில்
அவதூறு பரப்பியமை தொடர்பில் சட்டத்தரணி சுன்னாகம் காவல் நிலையத்தில்முறைப்பாடு செய்திருந்தார்.

சமூக வலைத்தள கணக்கு

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர், குறித்த சமூக
வலைத்தள கணக்கு உரிமையாளரை காவல் நிலையம் அழைத்து விசாரணைகளை மேற்கொண்டதுடன், சமூக வலைத்தளத்தில் சட்டத்தரணி தொடர்பாக பதிவிட்ட குற்றச்சாட்டுக்களுக்கு
ஆதாரங்களை சமர்ப்பிக்க கோரி இருந்தனர்.

இந்நிலையில், ஆதாரங்களை சமர்ப்பிக்க தவறியமையால் , அந்நபரை கைது செய்து காவல் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் குறித்த நபரை விசாரணைகளின் பின்னர் சந்தேகநபரை மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்த
நடவடிக்கை எடுத்துள்ளனர். 

NO COMMENTS

Exit mobile version