Home இலங்கை சமூகம் யாழில் பிரான்சில் இருந்து வந்த குடும்பஸ்தர் தவறான முடிவெடுத்து உயிரிழப்பு

யாழில் பிரான்சில் இருந்து வந்த குடும்பஸ்தர் தவறான முடிவெடுத்து உயிரிழப்பு

0

யாழில் (jaffna) மனவிரக்தியடைந்த பிரான்ஸில் இருந்து வந்த குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

குறித்த குடும்பஸ்தர் நேற்று (28.09.2024) உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இருபாலை கிழக்கு பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மரண விசாரணை

இச்சம்பவம் மேலும் தெரியவருகையில்,

இவர் நீண்ட காலத்திற்கு பின்னர் பிரான்ஸில் இருந்து ஊருக்கு வந்துள்ளார்.

இவரது 3 பிள்ளைகள் மூன்று வெளிநாட்டில் வசித்து வருகின்றனர். மன விரக்தியில் இருந்த இவர், தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்துள்ளளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.  

Source: https://ibctamil.com/article/men-from-france-death-in-jaffna-1727571532

NO COMMENTS

Exit mobile version