Home இலங்கை சமூகம் யாழில் வேலைக்கு சென்ற நபர் திடீர் மரணம்

யாழில் வேலைக்கு சென்ற நபர் திடீர் மரணம்

0

யாழில் (jaffna) வேலைக்கு சென்ற நிலையில் நெஞ்சுவலி ஏற்பட்டதால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (18.8.2024) யாழ்ப்பாணம் – நீர்வேலி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

நீர்வேலி பகுதியைச் சேர்ந்த தவராசா ரகுமாதேவா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நெஞ்சு வலி

சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்து நபர் நேற்று காலை கூலி வேலைக்காக சென்றிருந்தார்.

பின்னர் நெஞ்சு வலி ஏற்பட்டதன் காரணமாக 11 மணியளவில் வீடு திரும்பி உள்ளார்.

இந்நிலையில், அவர் மூச்சு விட சிரமப்பட்ட நிலையில் 12.15 மணியளவி கோப்பாய் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார்.

உடற்கூற்று பரிசோதனை

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளார்.

மேலும், உடற்கூற்று பரிசோதனைக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.  

NO COMMENTS

Exit mobile version