யாழில் (Jaffna) மர்மமான முறையில் உயிரிழந்த நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சடலம் யாழ்ப்பாணம் இராசாவின் தோட்டம், முலவை பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
அழகரத்தினம் கிஸ்ரி பால்ராஜ் (வயது 48) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இயற்கை மரணமா அல்லது கொலையா
மேலும் தெரியவருகையில்,
குறித்த நபரின் சடலம் முலவை சந்திப் பகுதியில் கட்டடத்தில் அமர்ந்திருந்தவாறு
பின் பக்கமாக விழுந்து உயிரிழந்த நிலையில் காணப்படுகிறது.
இது இயற்கை மரணமா அல்லது கொலையா என இதுவரை தெரிய வரவில்லை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
