Home இலங்கை சமூகம் நாட்டின் பல பகுதிகளில் கடும் வெப்பம் – மக்கள் அவதானம்

நாட்டின் பல பகுதிகளில் கடும் வெப்பம் – மக்கள் அவதானம்

0

நாட்டின் பல மாகாணங்களில் மனித உடலுக்கு அதிகம் உணரக்கூடிய வகையில் அதிக வெப்பமான வானிலை நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த விடயத்தை வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (09.04.2025) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.  

அதன்படி, மேற்கு, வடமேற்கு, வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்திலும் வெப்பமான வானிலை நிலவும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதிகமான பலத்த மழைவீழ்ச்சி

இதேவேளை, மேல் மாகாணத்திலும் புத்தளம் மாவட்டத்திலும் கரையோரப் பிரதேசங்களில் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சப்ரகமுவ, தென், கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.  

சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அந்த பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

  

https://www.youtube.com/embed/wrjJRv1c_is

NO COMMENTS

Exit mobile version