Home இலங்கை அரசியல் அநுர அரசை சவாலுக்குள்ளாக்கிய இராணுவ புலனாய்வு துறைகள்

அநுர அரசை சவாலுக்குள்ளாக்கிய இராணுவ புலனாய்வு துறைகள்

0

இலங்கையைப் பொறுத்த வரையில் அரச புலனாய்வு, இராணுவ புலனாய்வு, உள்ளக புலனாய்வு, வெளியக புலனாய்வு என்று புலனாய்வு கட்டமைப்புக்கள் தான் ஒரு அரசை நிர்வகிக்கின்ற பொறுப்புக்களில் இருக்கின்றது.

அரசு ஒட்டுமொத்த புலனாய்வுக் கட்டமைப்பையும் மறுசீரமைத்துள்ளதுடன் காவல்துறையிலும் பல மாற்றங்களைச் செய்துள்ளதுடன், இராணுவக் கட்டமைப்பிலும் மாற்றங்களைச் செய்திருக்கின்றது.

இந்த நிலையில் புதிதாக நியமிக்கப்பட்டவர்கள் அனுபவமில்லாதவர்கள் என்ற சூழ்நிலை இருக்கின்றதா அல்லது புதிதாக நியமிக்கப்பட்டவர்கள் அநுர அரசிற்கு எதிராக செயற்படுகின்ற சூழ்நிலை இருக்கின்றதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

மூவருக்கு நீதிமன்ற அழைப்பாணை விடுக்கப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் ஆகின்ற நிலையில் அழைப்பாணைக்கு செல்லாதவர்களை கைது செய்வதில் கூட காவல்துறையினருக்கு சவால் ஏற்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தத்தில் அநுர அரசு இயங்குவதற்கு யாரோ ஒரு சக்தி தடையாக இருக்கின்றதா அல்லது அநுர அரசில் இருக்கக்கூடிய முப்படையினரும் அரசிற்கு ஒத்துழைக்காமல் இருக்கின்றார்களா, அநுர அரசு ஏற்படுத்திய மாற்றம் என்பது அரசைக் கொண்டு இயக்குவதில் தடையாக இருக்கின்றதா என்று பல வினாக்கள் எழுந்துள்ளது.

இது குறித்த மேலும் பல விடயங்களை ஆராய்கின்றது இன்றைய ஐபிசி தமிழின் செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி …….



https://www.youtube.com/embed/IvLfVMSycO4

NO COMMENTS

Exit mobile version