Home இலங்கை அரசியல் கல்லாறு பகுதியில் மீண்டும் இராணுவக் காவலரண்: அமைச்சரின் அறிவிப்பு

கல்லாறு பகுதியில் மீண்டும் இராணுவக் காவலரண்: அமைச்சரின் அறிவிப்பு

0

சட்டவிரோத மணல் அகழ்வினை கட்டுப்படுத்த கல்லாறு பகுதியில் மீண்டும் இராணுவக் காவலரணை அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்
சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி கண்டாவாளையில் நேற்றையதினம்(13.06.2025) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

கண்டாவளைப் பிரதேச செயலாளர் பிரிவுக்கு
உட்பட்ட கல்லாறு பகுதியில் கடந்த 15 வருட காலமாக தொடர்ச்சியாக மணல் அகழ்வு இடம் பெற்று வருவதாக அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

நிரந்தரத் தீர்வு

தொடர்ச்சியாக பல ஆட்சிகள் மாறிவந்த
போதிலும் சட்டவிரோத மணல் அகழ்வுக்கு நிரந்தரத் தீர்வு காண முடியாத நிலையில்
காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையிலேயே, இராணுவக் காவலரணை அமைக்க தீர்மானித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version