Home இலங்கை சமூகம் அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்கள் : வழங்கப்பட்டுள்ள இராணுவ பாதுகாப்பு

அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்கள் : வழங்கப்பட்டுள்ள இராணுவ பாதுகாப்பு

0

அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் பயன்படுத்திய உத்தியோகபூர்வ இல்லங்களுக்கு பாதுகாப்பிற்காக  இராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை  நீதி, அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில், நேற்று முதல்  (12) இராணுவம் பாதுகாப்பிற்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்ச பாதுகாப்பு

இந்தநிலையில், அதிகபட்ச பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கையாக, அமைச்சுகளின் தலைவர்களின் அறிவித்தலின் பிரகாரம், அரச உத்தியோகபூர்வ இல்லங்களுக்கு இராணுவப் படையினர் அனுப்பப்பட்டதாகக் தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு அரசாங்கம் வழங்கிய 28 உத்தியோகபூர்வ இல்லங்களும் அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்களின் உடமைகள் குறித்து இந்த நாட்களில் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

NO COMMENTS

Exit mobile version