Home இலங்கை சமூகம் வெடித்து சிதறிய கைக்குண்டு: மூன்று இராணுவ வீரர்கள் வைத்தியசாலைக்கு.!

வெடித்து சிதறிய கைக்குண்டு: மூன்று இராணுவ வீரர்கள் வைத்தியசாலைக்கு.!

0

இராணுவப் பயிற்சியின் போது கைக்குண்டு வெடித்ததில் ஏற்பட்ட விபத்தில் மூன்று இராணுவ வீரர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மதுரு ஓயா இராணுவப் பயிற்சி முகாமில் இன்று (29) காலை இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது.

வீரர்களின் நிலைமை  

காயமடைந்த வீரர்கள் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

அதன்போது, அவர்களின் கால்களில் காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை இராணுவத்திற்கும் ரஷ்ய இராணுவத்திற்கும் இடையில் தற்போது நடத்தப்பட்டு வரும் கூட்டு இராணுவப் பயிற்சியின் போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version