அரச வங்கியொன்றில் மில்லயன் கணக்கான பணத்தை மோசடி செய்த தொழிலதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது, குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சந்தேகநபர் அரச வங்கியின் தலைமையகத்திற்கு போலி ஆவணங்களை சமர்ப்பித்து ரூ. 188.825 மில்லியன் பணத்தை மோசடி செய்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
முறைப்பாடு
இந்த நிலையில், கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் அதுருகிரிய, ஒருவல பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் என தெரியவருகிறது.
சிஐடிக்கு கிடைத்த முறைப்பாட்டின் படி, சந்தேக நபர் சிஐடியின் வணிகக் குற்றப் புலனாய்வுப் பிரிவு I இன் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.